
இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டு தயாரிப்பில் வந்த பிரம்மாஸ் ஏவுகணையின் மற்றொரு புதிய வடிவம் வெளிவர உள்ளது.
இந்த ஏவுகணை பிரம்மாஸ் எக்ஸ் என அழைக்கப்படுகிறது, இது 4.5 மாக் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதன் தாக்குதல் வரம்பு பற்றிய தகவல்கள் ஏதும் தற்போது வெளியாகவில்லை அது மட்டும் மர்மமாக உள்ளது.
இதனை நியர் ஹைப்பர்சானிக் மிசைல் என அழைக்கின்றனர், பிரம்மாஸ் எக்ஸ் ஏவுகணை அடிப்படை பிரம்மாஸை விட 30% அதிக வேகத்தை கொண்டது என கூறப்படுகிறது.