
சத்திஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் காவல்துறை வீரரை கடத்திய நக்சல்கள் பின்பு அவரை கொலை செய்துள்ளனர்.
மூர்டி டடி என்ற சப் இன்ஸ்பெக்டரை கடத்திய நக்சல்கள் பின்பு அவரை கொலை செய்துள்ளனர்.
கடத்திய உடனேயே அவரை விடுவிக்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு 22 பாதுகாப்பு படை வீரர்கள் நக்சல்களுடனான மோதலில் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.