
நேற்று அரபிக்கடல் அதாவது கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் பன்னாட்டு கடற்படை போர் பயிற்சிகள் துவங்கி உள்ளன.
லா பெருஸ் என்ற இந்த பயிற்சியில் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கு பெறுகின்றன.
இந்திய கடற்படை சார்பில் சத்புரா ,கில்டான் மற்றும் பி8ஐ விமானங்கள் ஆகியவை பங்கு பெறுகின்றன.
இந்த பயிற்சியில் கடல் பரப்பு போர்முறை, வான் பாதுகாப்பு மற்றும் வான் தாக்குதல் போர்முறைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.