
இந்திய கடற்படை நீண்ட காலமாகவே மூன்று விமானந்தாங்கி கப்பல்களை இயக்க விரும்பி வருவது அனைவரும் அறிந்ததே,
ஆனால் பட்ஜெட் தட்டுபாடு காரணமாக தற்போது மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் திட்டத்தை தள்ளி போட்டுவிட்டு 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்ட உள்ளது.
அதை போல இந்திய கடற்படை 4 எல்.பி.டி ரக கப்பல்களை பெற விரும்பிய நிலையில் பட்ஜெட் தட்டுபாடு காரணமாக 2 கப்பல்கள் மட்டுமே பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கப்பல்களை சிறிய விமானந்தாங்கி கப்பல்களாகவும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான விமானந்தாங்கி கப்பல்கள் நீளமான ஒடுபாதையை கொண்டவை ஆகவே அவற்றில் இருந்து மிக்29 மற்றும் டெட்பஃப் விமானங்களை இயக்க முடியும்,
ஆனால் எல்.பி.டி ரக கப்பல்கள் சிறிய ஒடுபாதையை கொண்டவை ஆகவே அவற்றில் ஸ்கி ஸம்ப் அமைத்து விமானங்களை இயக்கலாம், அந்த வகையில் சிறிய ஒடுதளத்தில் இயங்கும் வகையிலான ஒரே விமானம் எஃப்35 ஆகும்.
ஒருவேளை அமெரிக்கா அதனை விற்க முன்வராத பட்சத்தில் ரஷ்யா 2017ஆம் ஆண்டு முதலே இத்தகைய விமானத்தை உருவாக்க முயன்று வருகிறது அதனை பெறவும் நாம் முயற்சிக்கலாம்.
மேலும் ஏற்கனவே தென்கொரியா, ஜப்பான், இத்தாலி, ஸ்பெயின் ஆகியவை இத்தகைய கப்பல்களை சிறிது மாற்றியமைத்து எஃப்35 விமானங்களை இயக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.