இந்தியாவுக்கான MH-60R ஹெலிகாப்டர்கள் ஜூலையில் டெலிவரி !!

  • Tamil Defense
  • April 21, 2021
  • Comments Off on இந்தியாவுக்கான MH-60R ஹெலிகாப்டர்கள் ஜூலையில் டெலிவரி !!

இந்தியா தனது கடற்படைக்காக அமெரிக்காவிடம் இருந்து போயிங் நிறுவனத்தின் MH 60 ரோமியோ ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்தது.

இவற்றில் முதலாவது ஹெலிகாப்டர் நியூயார்க் நகரில் தற்போது சோதனைகளை துவங்கி உள்ளது.

முதல் மூன்று ஹெலிகாப்டர்கள் ஜூலை மாத இறுதியில் இந்தியா வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் சுமார் 2.4 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் 24 போயிங் எம்.ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியா ஆர்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.