உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் மாவோயிஸம் !!

  • Tamil Defense
  • April 7, 2021
  • Comments Off on உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் மாவோயிஸம் !!

இந்திய நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக விளங்குவது மாவோயிஸம் எனும் சிகப்பு பயங்கரவாதம் ஆகும்.

கடந்த 2009ஆம் ஆண்டு அன்றைய பாரத பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இந்த ஆபத்தை அடையாளம் கண்டு மிகப்பெரிய துணை ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.

1 லட்சத்திற்கும் அதிகமான துணை ராணுவப்படை வீரர்கள், 2 லட்சத்திற்கும் அதிகமான காவல்துறையினர் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 11 ஆண்டுகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

சுமார் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 9 மாநிலங்களில் நக்சல்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி இருந்தனர்.

உ.பி, ம.பி, பிஹார், மேற்கு வங்காளம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 100க்கும் அதிகமான மாவட்டங்கள் நக்சல்களால் மோசமாக பாதிக்கப்பட்டன.

தற்போது பல வருட நடவடிக்கைகளால் இன்று ஜார்க்கண்ட் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன, நாட்டின் 46 மாவட்டங்களில் மட்டுமே இவர்களின் ஆதிக்கம் உள்ளது.

இருந்தாலும் இனியும் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன, உள்நாட்டு பாதுகாப்பு என்பது பகுதி நேர வேலையல்ல.

அது முழுநேரமாக செயல்படுவதாக ஒரு தனி அமைச்சகமாக உள்துறையில் இருந்து பிரிக்கப்பட வேண்டும் என முன்னாள் இ.கா.ப அதிகாரி யஷோவர்தன் ஆசாத் கூறுகிறார்.

மேலும் மிக ஆழமாக துணை ராணுவ படை முகாம்களை அமைத்து நக்சல்களின் கோட்டைகளையே பிடிக்க வேண்டும் எனவும் அதற்கு சாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கூறுகிறார்,

மேலும் பேசுகையில் துணை ராணுவபடைகளில் பல முக்கிய சீர்த்தருத்தங்கள், துல்லியமான உளவு தகவல்கள், நவீன இயங்கும் முறைகள் ஆகியவை முக்கியம் என அவர் கூறுகிறார்.