
தேஜாஸ் விமானத்தை சோதிக்க இந்தியா வரும் மலேசிய குழு !!
இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்த இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து பல்வேறு நாடுகளுக்கு தேஜாஸ் போர் விமானத்தை விற்பனை செய்ய இந்தியா முயன்று வருகிறது.
இந்த நிலையில் மலேசிய விமானப்படை குழு தேஜாஸ் விமானத்தை சோதனை செய்ய இந்தியா வர உள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இந்த சோதனைகள் நடைபெற உள்ளது.
மலேசிய விமானப்படைக்கு இத்தகைய 12 இலகுரக போர் விமானங்கள் தேவைப்படுகிறது.
மேலும் இந்த ஆஃபரில் இந்தியா மலேசியாவை கவரும் வகையில் பராமரிப்பு, சரிபார்ப்பு மற்றும் நடவடிக்கைகள் மையம் ஒன்றை மலேசியாவிலேயே அமைத்து தரவும் தயாராக உள்ளது.
இதனால் மலேசியா விமானங்களை இந்தியா கொண்டு வந்து பராமரிப்பு அல்லது இதர பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை மாறாக அங்கேயே அவற்றை செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.