விக்ராந்திற்கு தொலைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு !!

  • Tamil Defense
  • April 10, 2021
  • Comments Off on விக்ராந்திற்கு தொலைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு !!

இந்தியா சொந்தமாக கட்டி வரும் விமானந்தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தில் தொலைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு நிறாவப்பட உள்ளது.

இதற்காக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த தொலைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை பயன்படுத்தப்பட உள்ளது, இதன் தாக்குதல் வரம்பு 70கிமீ ஆகும்.

அதை போலவே செங்குத்தாக ஏவப்படும் குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணையும் இதில் நிறுவப்பட உள்ளது, இதனுடைய தாக்குதல் வரம்பு 40 கிமீ ஆகும்.

இவை இரண்டுமே கடல், வான் மற்றும் தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் திறன் கொண்டவை ஆகும்.

மேலும் விக்ராந்த் கப்பலானது ஏற்கனவே பேசின் சோதனைகளை முடித்துள்ளது அதில் என்ஜின்கள், டர்பைன்கள், மின்உற்பத்தி அமைப்புகள் ஆகியவை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

விரைவில் ஐ.என்.எஸ். விக்ராந்த் கடல் சோதனைகளை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.