எங்கள் அப்பாவை அனுப்பி விடுங்கள்; கெஞ்சும் வீரரின் குழந்தை

சத்தீஸ்கரில் சனிக்கிழமை நக்சலுடனான சண்டையை தொடர்ந்து காணாமல் போன மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ஜவானின் குடும்ப உறுப்பினர்கள், அவரை விடுவிக்குமாறு நக்சல்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காஷ்மீரின் லோயர் பர்னாய் பகுதியைச் சேர்ந்த ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ், சண்டையிட்ட சிஆர்பிஎஃப் படையில் இருந்தவர் ஆவார்.அவர் நக்சல் பிடியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

“நான் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் என் கணவரிடம் பேசினேன், அவர் தனது பையையும் உணவையும் ஒரு ஆபரேசனுக்காக தயார் செய்து வருவதாகவும், நாளை என்னுடன் பேசுவதாகவும் என்னிடம் கூறினார்” என்று அவரது மனைவி மீனு கூறியுள்ளார்.

“தாக்குதலைத் தொடர்ந்து, சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு உள்ளூர் நிருபர் என்னை அழைத்து, நான் நக்சல்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டார், எங்கள் வேண்டுகோளை அவர்களிடம் எடுத்துச் செல்வேன் என்று கூறினார். எனவே, நான் அவரிடம் எனது கணவரை விடும்படி கூறினேன்” என அவரது மனைவி கூறியுள்ளார்.

பந்தலாப்பில் உள்ள சிஆர்பிஎஃப் குழு மையம் அவர் இருக்கும் இடம் குறித்து எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் அனைவரும் மிகவும் கவலையாக இருக்கிறோம், ”என்று கூறியுள்ளார் அவரது மனைவி.

சிஆர்பிஎப்பின் சிறப்பு செயல்பாட்டு பிரிவு கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசோலூட் ஆக்சன் (கோப்ரா) சார்பா, மன்ஹாஸ் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் சத்தீஸ்கருக்கு மாற்றப்பட்டார்.

அவர் மார்ச் 2011ல் பிரதம மத்திய போலீஸ் படையில் சேர்ந்தார்.அவரது முதல் போஸ்டிங் அஸ்ஸாம் ஆகும்.அவருக்கு ஐந்து வயது குழந்தை உள்ளது.