1 min read
தனது விமானப்படையை மேம்படுத்த இந்திய உதவியை நாடும் மத்திய ஆசிய நாடு !!
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் தனது விமானப்படையை நவீனபடுத்த இந்திய உதவியை நாடி உள்ளது, அந்நாட்டு விமானப்படை விமானங்கள் ரஷ்ய அல்லது சோவியத் தயாரிப்புகள் ஆகும்.
இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கஜகஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் லெஃப்டினன்ட் ஜெனரல் நுர்லான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கஜகஸ்தான் தனது விமானப்படையில் உள்ள மி17 ரக ஹெலிகாப்டர்களை நவீனபடுத்த பெல் மற்றும் ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கருவிகள் பெற விரும்புகிறது.
அதே போல தனது விமானப்படையில் உள்ள சுகோய்30 எஸ்.எம் ரக போர் விமானங்களை நவீனபடுத்தவும் இந்திய உதவியை பெற விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.