இந்தோ பசிஃபிக் பகுதியில் இங்கிலாந்து கடற்படையின் வருகையை வரவேற்கும் ஜப்பான் !!

இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இங்கிலாந்து தனது விமானந்தாங்கி கப்பலை அனுப்புவதை ஜப்பான் வரவேற்றுள்ளது.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கிஷி நோபுவோ இங்கிலாந்து இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவதை வலியுறுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இங்கிலாந்து கடற்படையின் குயின் எலிசபெத் விமானந்தாங்கி கப்பலானது மத்திய தரைக்கடல் சூயஸ் கால்வாய் வழியாக இந்திய பெருங்கடல் வந்து,

இந்திய கடற்படையுடன் பயிற்சி மேற்கொண்டு பின்னர் சிங்கப்பூர், தென்சீன கடல் வழியாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நோக்கி பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படையணியில் அமெரிக்க மற்றும் நெதர்லாந்து கடற்படை கப்பல்கள், அமெரிக்க மரைன் கோர் எஃப்35 விமானங்கள் ஆகியவை அடங்கும் என்பது கூடுதல் தகவல்.