இத்தாலி ரஷ்ய உளவாளிகள் பிரச்சினை !!

  • Tamil Defense
  • April 1, 2021
  • Comments Off on இத்தாலி ரஷ்ய உளவாளிகள் பிரச்சினை !!

சமீபத்தில் இத்தாலிய சிறப்பு காவல்படையான கரிபயானாரி முக்கிய தகவல்களை கசிய விட்ட ஒரு இத்தாலிய கடற்படை அதிகாரியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் இத்தாலிய கடற்படையின் கேப்டன் ஆவார் இவர்ஒரு ஃப்ரிகேட் ரக கப்பலை வழிநடத்தியவர் ஆவார்.

இவர் இத்தாலிய கூட்டு படைகள் தலைமை தளபதியின் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் ஆகையால் உயர் ராணுவ ரகசியங்கள் பலவற்றை பற்றி அறிந்தவராக இருந்தார்.

ரஷ்ய உளவாளிகள் இவரிடம் பணம் கொடுத்து முக்கிய ஆவனங்களை பரிமாறும் போது கையும் களவுமாக சிக்கினார்.

பல முக்கிய இத்தாலிய மற்றும் நேட்டோ ராணுவ ரகசியங்களை பரிமாறி இருக்கலாம் என கூறப்படுகிறது இதற்காக சுமார் 5000 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் 4,30,692 ருபாய் (5860 டாலர்கள்) வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் தூதரக பணியாளர்கள் என்ற அடிப்படையில் ரஷ்யர்கள் கைது செய்யப்படவில்லை ஆனால் அவர்களை வெளியேற்ற இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தாலிய வெளியுறவு அமைச்சர் லூய்ஜி டி மையோ ரஷ்ய தூதர் செர்கே ராசோவை அழைத்து இதற்கான வாய்மொழி உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

பனிப்போர் காலத்தில் 1989ஆம் ஆண்டு சோவியத் மற்றும் பல்கேரிய உளவாளிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன அதன்பிறகு இந்த சம்பவம் அத்தகைய நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய தூதரக அதிகாரிகள் கூறுகையில் ரஷ்ய ராணுவ பணியாளர் ஒருவர் இத்தாலி காவல்துறையிடம் பிடிப்பட்டது உண்மை தான் எனவும் இதனால் இருதரப்பு உறவுகளில் பாதிப்பு ஏற்படாது என கருதுவதாகவும் கூறினர்.