
நேற்று ஈரானுடைய முக்கிய அணு உலையான நதான்ஸ் நிலத்தடி அணு உலையை இஸ்ரேல் தாக்கி உள்ளது.
இந்த அணு உலையின் மின்சார க்ரிட்டை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் ஈரான் உயிர் சேதமோ பெருமளவில் பொருட் சேதமோ ஏற்படவில்லை எனவும்,
இது ஈரானின் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாத பயங்கரவாத சக்திகளின் செயல் எனவும் கூறியுள்ளது.
ஆனால் இந்த வெடிகுண்டு தாக்குதல் அணு உலையின் மின்சார அமைப்பை முற்றிலும் அழித்துள்ளதாகவும் நிலைமை சரியாக குறைந்தபட்சம் 9 மாதங்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த வருடமும் இதே அணு உலை தாக்குதலுக்கு உள்ளானது, முக்கிய ஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை ஆகியவற்றில் இஸ்ரேல் பங்காற்றி உள்ளது உலகறிந்த விஷயம்.