இதுவரை இல்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவுட்ட போவதாக ஈரான் அறிவிப்பு !!

  • Tamil Defense
  • April 14, 2021
  • Comments Off on இதுவரை இல்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவுட்ட போவதாக ஈரான் அறிவிப்பு !!

ஈரான் அணுசக்தி துறையின் முக்கிய அதிகாரியான அப்பாஸ் அராக்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவூட்ட போவதாக அறிவித்துள்ளார்.

அதுவும் சமீபத்தில் தாக்குதல் நடைபெற்ற நதான்ஸ் நிலத்தடி அணு உலையில் 60% சுத்தமான யூரேனியத்தை பெற செறிவுட்டல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

இது ஈரானிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும், தற்போது வரை 20% அளவுக்கு தான் பணிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.