பஞ்சாப் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட கடத்தல்காரன் !!

  • Tamil Defense
  • April 8, 2021
  • Comments Off on பஞ்சாப் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட கடத்தல்காரன் !!

நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலம் சர்வதேச எல்லையோரம் அத்துமீறி நுழைந்த பாக் கடத்தல்காரன் சுட்டு வீழ்த்தப்பட்டான்.

இந்த கடத்தல் பற்றிய ரகசிய துப்பு கிடைத்ததை அடுத்து சிறப்பு காவல் கண்காணிப்பாளர் துருவ் தாஹியா தலைமையில பஞ்சாப் காவல்துறையும் எல லை பாதுகாப்பு படையினரும் இணைந்து செயல்பட்டனர.

கொல்லப்பட்ட கடத்தல்காரன் இடமிருந்து 22 கலோ ஹெராயின், 2 ஏகே-47 ரக துப்பாக்கிகள்,தோட்டாக்கள் மற்றும் பாகிஸ்தானிய சிம் ஆகியவை கைபற்ற பட்டுள்ளன.

முதல்கட்ட விசாரணையில் கடத்தல்காரனுக்கு பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவருடன் தொடர்பு உள்ளதும்,

அவர்கள் இருவரும் பெல்ஜியம் நாட்டில் வசித்து வருவதும் பாக் ஐ.எஸ்.ஐ உதவியுடன் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.