ஆகஸ்ட் மாதம் இந்திய ராணுவத்தில் முக்கிய சீர்திருத்தங்கள் !!

  • Tamil Defense
  • April 4, 2021
  • Comments Off on ஆகஸ்ட் மாதம் இந்திய ராணுவத்தில் முக்கிய சீர்திருத்தங்கள் !!

வருகிற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவின் 75ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் பிரதமர் மோடி பாதுகாப்பு துறையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இரண்டு புதிய ஒருங்கிணைந்த கட்டளையகங்கள் அன்று முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன.

முதலாவது அலகாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கட்டளையகம் அமைக்கப்பட உள்ளது இது முப்படைகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை இயக்கும் இதன் தலைவராக மூன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற விமானப்படை அதிகாரி இருப்பார்.

இரண்டாவதாக கார்வார் நகரை தலைமையிடமாக கொண்டு ஒருங்கிணைந்த கடல்சார் கட்டளையகம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இந்த கட்டளையகம் முப்படைகளின் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளை கட்டுபடுத்தும் இதன் தலைவராக மூன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற கடற்படை அதிகாரி இருப்பார்.

இது தவிர எதிர்காலத்தில் மேலும் ஒருசில ஒருங்கிணைந்த கட்டளையகங்கள் உருவாக்கப்பட உள்ளன.

சீன எல்லைக்கு இரண்டு ஒருங்கிணைந்த கட்டளையகங்களும், பாகிஸ்தான் எல்லைக்கு ஒரு ஒருங்கிணைந்த கட்டளையகமும் அமைக்கப்பட உள்ளது.

தற்போது உலகில் அமெரிக்கா சீனா உள்ளிட்ட 32 நாடுகளில் இத்தகைய ஒருங்கிணைந்த கட்டளையகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.