
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ நங்காலா எனும் நீர்மூழ்கி பாலி அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது.
தீடிரென கப்பல் மாயமான நிலையில் இந்தோனேசிய கடற்படை அந்த நீர்மூழ்கி கப்பலை தேடி வருகிறது.
ஜெர்மனியின் டைப்209 ரகத்தை சேர்ந்த இது 70களின் இறுதியில் ஜெர்மனியில் கட்டப்பட்டு 80களின் ஆரம்பத்தில் இந்தோனேசிய கடற்படையில் இணைந்தது.
இந்தோனேசிய ராணுவம் பல பழைய தளவாடங்களை பயன்படுத்தி வருகிறது அவை அடிக்கடி மோசமான விபத்துகளையும் சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தோனேசிய அரசு சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் உதவி கோரி உள்ளது.