உள்நாட்டு ஹெலிகாப்டர் கடற்படையில் இணைப்பு !!
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் மார்க்-3 நேற்று கடற்படையில் இணைந்தது.
கோவாவில் உள்ள கடற்படை தளத்தில் மேற்கு கடற்படை கட்டளையக தளபதி வைஸ் அட்மிரல் ஹரிகுமார் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அவை படையில் இணைந்தன.
இவை பல்திறன் ஹெலிகாப்டர்களாகும் மேலும் இவற்றை தேடுதல் மற்றும் மீட்பு, கடலோர கண்காணிப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹெலிகாப்டர்களில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த ஷக்தி என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது கூடுதல் சிறப்பு ஆகும்.
இந்த இணைப்பு கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் நாம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளோம் என்பதை உணர்த்துகிறது.
எதிர்காலத்தில் 111 இத்தகைய ஹெலிகாப்டர்களை கடற்படை வாங்குவதற்கான வாய்ப்புகளும் இதனால் பிரகாசமாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது.