இந்தியா தனது அணு ஆயுத திறனை குறைத்து சொல்கிறதா ??

இந்தியா கடந்த 1974ஆம் ஆண்டு ஸ்மைலிங் புத்தா என்ற பெயரில் நடத்திய அணு ஆயுத சோதனையில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுக்கு நிகரான அணுகுண்டை சோதித்தது.

இதனையடுத்து இந்தியா அன்றில் இருந்து அணு ஆயுதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இணைந்தது.

பின்னர் ஆபரேஷன் ஷக்தி அணு ஆயுத சோதனை மூலமாக இந்தியா ஒரு முழு அணு ஆயுத நாடாக உலக அரங்கில் பெயர் பெற்றது.

இன்று 25 கிலோடன்கள் முதலாக 300 கிலோடன்கள் வரையிலான அணு ஆயுதங்களை இந்தியா தன்வசம் வைத்துள்ளது, இவற்றை சிறிய குண்டுகளில் இருந்து ஏவுகணைகள் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.

கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வு ஒன்றில் இந்தியாவிடம் சுமார் 8000 கிலோ ஆயுத புளுட்டோனியம் உள்ளதாகவும் அதில் மூன்றில் ஒன்றை எடுத்து கொண்டால் கூட சுமார் 2400 கிலோ புளுட்டோனியம் அணு ஆயுதம் தயாரிக்க உதவும் என கூறப்பட்டது.

ஒரு அணு ஆயுதம் தயாரிக்க 4 கிலோ புளுட்டோனியம் போதும் அந்த வகையில் சுமார் 600க்கும் அதிகமான அணு ஆயுதங்களை தயாரிக்க இந்தியாவால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சைரஸ் மற்றும் த்ருவா ஆகிய அணு உலைகள் மூலமாக இன்றைய தேதி வரை கிடைத்த புளுட்டோனியத்தை கொண்டு மட்டுமே 200 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்.

அதே போல் இந்தியாவிடம் ஏறத்தாழ 300கிலோ செறிவூட்டப்பட்ட யூரேனியம் உள்ளது அவற்றை கொண்டு சுமார் 160 முதல் 190 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என கூறப்படுகிறது.

ஆனால் நம்மிடம் 170 அணு ஆயுதங்கள் மட்டுமே இருப்பதாக கூறுகிறோம், மற்ற நாடுகள் தங்களது அணு ஆயுத இருப்பை அதிகரித்து வரும் நேரத்தில்,

இந்தியா மட்டும் நிதானமாக பொறுமையாக செயல்படுவது உலக அமைதிக்கு இந்தியா ஊறு விளைவிக்காது என்ற உத்தரவாதத்தை அளிப்பதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.