இந்தியாவின் புதிய அதிநவீன போர்க்கப்பல் ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • April 13, 2021
  • Comments Off on இந்தியாவின் புதிய அதிநவீன போர்க்கப்பல் ஒரு பார்வை !!

சமீபத்தில் இந்தியா ஐ.என்.எஸ். த்ருவ் என்கிற அதிநவீன ஏவுகணை கண்காணிப்பு மற்றும் இடைமறிப்பு கப்பலை படையில் இணைத்தது.

இதையடுத்து தற்போது மற்றுமொரு புதிய போர்க்கப்பலை இந்திய கடற்படைக்காக தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கப்பல் கடலடியை ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்கும் இந்த தகவல்கள் அனைத்தும் நமது நீர்மூழ்கி கப்பல்கள் கடலடியில் பயணிக்க மிகப்பெரிய அளவில் உதவும்,

இந்த கப்பலில் ஆளில்லா நீர்மூழ்கி கலன்கள், ரிமோட் மூலமாக இயக்கப்படும் கலன்கள், சர்வே படகு, சோலாஸ் படகு ஆகியவை இருக்கும்.

இதன் வடிவமைப்பு பணிகளை கொச்சியில் உள்ள தேசிய கடல்சார் ஆய்வு மையம் கொச்சி கப்பல் கட்டுமான தளத்துடன் இணைந்து மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலில் 18 ஆய்வகங்கள் இருக்கும் அவற்றில் 40 விஞ்ஞானிகள் பணியாற்றுவர் மேலும் 30 கடற்படை வீரர்கள் பணியாற்றுவர்.

இந்த கப்பல் தொடர்ந்து 30 நாட்களுக்கு கடலிலேயே இருக்கும் திறன் கொண்டது மேலும் 4000 கடல்மைல் தொலைவு வரை பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.