
இந்திய ராணுவம் வங்கதேச நாட்டில் நடைபெற உள்ள பன்னாட்டு போர் பயிற்சி ஒன்றில் கலந்து கொள்ள உள்ளது.
“ஷாந்திர் ஒக்ரோஷெனா 2921” என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி நேற்று முதலாக 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போர் பயிற்சியில் பூட்டான் மற்றும் இலஙாகை ஆகிய நாடுகளும் பங்கேற்க உள்ளன மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி, சவுதி அரேபியா, குவைத் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
இந்த போர் பயிற்சியானது அமைதி காக்கும் பணிகள் பற்றிய பயிற்று முறைகள் சார்ந்ததாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.