
இந்திய கடற்படையின் முன்னனி போர் கப்பல்களில் ஒன்றான ஐ.என்.எஸ். தல்வார் சவுதி அரேபியா சென்றுள்ளது.
கடந்த 3ஆம் தேதி சவுதி அரேபியாவின் ஜூபைல் துறைமுகத்தில் ஐ.என்.எஸ் தல்வார் சென்று சேர்ந்தது.
இந்த பயணத்தின் மூலமாக இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சவுதி அரேபிய கடற்படையுடன் நமது கப்பலானது “பாஸெக்ஸ்” ரக கடற்படை கூட்டு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.
நமது ஐ.என்.எஸ் தல்வார் ஃப்ரிகேட் கப்பலானது ஏற்கனவே வளைகுடா பகுதியில் ஆபரேஷன் சங்கல்ப் என்ற பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.