
லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகளில் கொரானா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளது இந்திய கடற்படை
ஆக்சிஜன் சப்ளை செய்வதற்காக இந்திய கடற்படையின் HQSNC சார்பில் ஐஎன்எஸ் சார்தா “ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்”ஆக மாற்றப்பட்டுள்ளது.அதாவது ஆக்சிஜன் சிலிண்டர்களை தீவுகளுக்கு எடுத்து சென்று கொடுத்து அங்கிருந்து காலியான சிலிண்டர்களில் ஆக்சிஜனை நிரப்ப கொண்டு வருகிறது.

இது தவிர இரு மருத்துவர்கள் மற்றும் இரு மருத்துவ உதவியாளர்களுடன் PPE, RADT Kits, முககவசம், கையுறை, நெபுலைசர்கள், SPO2 probes மற்றும் மற்ற மெடிக்கல் சப்ளைகளை தனது கடற்படை சார் ஆதாரங்கள் மூலம் பெறப்பட்டு அங்கு அனுப்பி வருகிறது.
கவராத்தியில் உள்ள லட்சத்தீவுகளுக்கான கடற்படை பொருப்பாளர் தீவுகளுக்கு தனது முழு உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
