ஹெலிகாப்டர்களை குத்தகைக்கு எடுக்க கடற்படை முடிவு !!

  • Tamil Defense
  • April 5, 2021
  • Comments Off on ஹெலிகாப்டர்களை குத்தகைக்கு எடுக்க கடற்படை முடிவு !!

இந்திய கடற்படை சுமார் 111 கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை வாங்க நினைத்து இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் அது தடைபட்டு உள்ளது.

ஆகவே தற்போது இந்திய கடற்படை இடைக்கால நடவடிக்கை ஆக குறிப்பிட்ட அளவில் ஹெலிகாப்டர்களை குத்தகையில் எடுக்க முடிவு செய்துள்ளது.

இந்திய கடற்படை ஒரு டஜனுக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது குறித்த அறிவிக்கையை அனுப்பி உள்ளது.

உள்நாட்டில் இருந்து 24 ஹெலிகாப்டர்களும், வெளிநாடுகளில் இருந்து 12-16 ஹெலிகாப்டர்களையும் பெற முடிவ செய்யப்பட்டு உள்ளது.

ஒரு ஹெலிகாப்டருக்கு மாதம் குறைந்தபட்சம் 40 லட்சம் முதல் 3.4 கோடி வரை குத்தகை பணமாக வழங்க இந்திய கடற்படை தயாராக உள்ளது.