
அமெரிக்காவிடம் இருந்து இந்திய கடற்படைக்காக புதிய எம்.ஹெச் 60 ரோமியோ பல்திறன் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன.
மொத்தமாக 15,000 கோடி ருபாய் மதிப்பில் 24 ஹெலிகாப்டர்கள் ஆயுதங்களுடன் வாங்கப்பட உள்ளன.
இந்த வருடம் முதல் மூன்று ஹெலிகாப்டர்கள் படையில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் இந்திய கடற்படை குழு ஒன்று இந்த ஹெலிகாப்டர்களை பெற அமெரிக்கா செல்கிறது.
இந்த வகை ஹெலிகாப்டர்கள் விக்ரமாதித்யா உள்ளிட்ட முன்னனி போர் கப்பல்களில் இருந்து இயங்கும் என கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 123 கடற்படை பல பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை வாங்கவும் கடற்படை நீண்ட கால திட்டம் ஒன்றை கைவசம் வைத்துள்ளது.