
இந்திய கடற்படை கடந்த வருடம் நீர்மூழ்கி கப்பல்கள் விபத்தில் சிக்கினால் மீட்க உதவும் அதிக ஆழ மீட்பு வாகனம் ஒன்றை படையில் இணைத்தது.
தற்போது இந்த வாகனத்தை காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கியான கே.ஆர்.ஐ நங்காலாவை தேட இந்திய கடற்படை அனுப்பி உள்ளது.
இந்திய கடற்படையும் நேரடியாக இத்தகைய நடவடிக்கையை தற்போது தான் முதல் முறையாக மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இந்திய கடற்படையும் அனுபவம் பெறும், அதே நேரத்தில் காணாமல் போன வீரர்கள் கண்டுபிடிக்க பட வேண்டும் என்பது அனைவரின் வேண்டுதலாகும்.