132 ஆண்டுகள் சேவைக்கு பின்னர் ராணுவ பண்ணைகள் மூடல்!!

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1889ஆம் ஆண்டு ராணுவத்தின் தேவைகளுக்காக ராணுவ பண்ணைகள் தோற்றுவிக்கப்பட்டன.

சுதந்திரம் அடைந்த போது சுமார் நூற்றுக்கணக்கான பண்ணைகள் இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து தற்போது 32 பண்ணைகள் மட்டுமே உள்ளன.

தற்போது இந்த 32 பண்ணைகள் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளன, அவை அம்பாலா, ஶ்ரீநகர், ஆக்ரா, கொல்கத்தா, பதான்கோட், லக்னோ, மீரட், அலகாபாத், லக்னோ ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

இந்த பண்ணைகளில் 20,000 கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வந்தன, இந்த பண்ணைகளில் 14 ராணுவத்தினரும் 2000 சிவிலியன் பணியாளர்களும் பணியாற்றி வந்தனர்.

தற்போது இன்று இந்த பண்ணைகள் அனைத்தும் முடப்படுகின்றன, இதற்காக தலைநகர் தில்லியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த பண்ணைகளின் நிலங்கள் அனைத்தும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலிடம் ஒப்படைக்கப்பட உள்ளன, பணியாளர்கள் அனைவரும் ராணுவத்தின் வேறு பல பிரிவுகளில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இந்த பண்ணைகள் ராணுவத்தின் பால் பொருட்கள் தேவையில் 14% அளவுக்கு நிறைவேற்றுகின்றன, அதாவது 21 கோடி லிட்டர்கள் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.