போர்க்குதிரைகளாய் பாயும் விமானப்படையின் சி-17 விமானங்கள்

 • Tamil Defense
 • April 30, 2021
 • Comments Off on போர்க்குதிரைகளாய் பாயும் விமானப்படையின் சி-17 விமானங்கள்

இந்திய விமானப்படையின்
Boeing C-17A GlobeMaster III விமானங்கள் உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி போர்க்குதிரைகளாய் செயல்பட்டு தேவையான மருத்துவ உபகரணங்களை நாடு முழுதும் அனுப்பி வருகின்றன.

28 ஏப்ரல் வரை வெளிநாடுகளுக்கு 16 முறை பறந்து 460 MT கொண்ட 27 ஆக்சிஜன் கன்டெய்னர்களை இந்தியா கொண்டு வந்துள்ளன.மேலும் நமது நாட்டுக்குள்ளேயே 116 முறை பறந்து 1465 MT அளவு கொண்ட 70 கன்டெய்னர்களை டெலிவரி செய்துள்ளன.

சில ஆபரேசன்கள்

சர்வதேசம் :

 1. ஒரு C-17 விமானமம பங்கோக்கில் இருத்து மூன்று ஆக்சிஜன் டேங்கர்களை பனகர் விமான தளம் கொண்டு வருகிறது.
 2. ஒரு C-17 விமானம் சிங்கப்பூரில் இருந்து நான்கு ஆக்சிஜன் டேங்கர்களை சுமந்து பனகர் தளம் வருகிறது.
 3. ஒரு C-17 விமானம் துபாயில் இருந்து ஆறு ஆக்சிஜன் டேங்கர்களை சுமந்து பனகர் தளம் வந்தது.

உள்நாடு

 1. ஒரு C-17 விமானம் மூன்று ஆக்சிஜன் டேங்கர்களை ஹிண்டனில் இருந்து ராஞ்சி கொண்டு சென்றது.
 2. ஒரு C-17 விமானம் இரு ஆக்சிஜன் டேங்கர்களை சுமந்து சண்டிகரில் இருந்து ராஞ்சி சென்றது.
 3. ஒரு C-17 விமானம் இரு டேங்கர்களை சுமந்து சன்டிகரில் இருந்து புவனேஷ்வர் சென்றது.
 4. ஒரு C-17 விமானம் நான்கு டேங்கர்களை சுமந்து மும்பையில் இருந்து புவனேஷ்வர் சென்றது.
 5. ஒரு C-17 விமானம் இரு டேங்கர்களை சுமந்து லக்னோவில் இருந்து ராஞ்சி சென்றது.
 6. ஒரு C-17 விமானம் இரு டேங்கர்களை சுமந்து ஜோத்பூரில் இருந்து ஜாம்நகர் சென்றது.
 7. ஒரு C-130 விமானம் 75 காலியான சிலிண்டர்களை சுமந்து பரோடாவில் இருந்து ஹின்டன் சென்றது.