
இந்திய ராணுவம் அமெரிக்க மற்றும் சீன ராணுவங்களை போல 5ஜி, சுயசிந்தனை தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ட்ரோன்கள் நோக்கி நகர முடிவு செய்துள்ளது.
இந்திய ராணுவம் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு இத்தகைய தொழில்நுட்பங்கள் நோக்கி நகர உள்ளது,
இதற்கு தேவையான உதவிகளை பாதுகாப்பு அமைச்சகம் செய்யும் என பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் கூறியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் இத்தகயை தொழில்நுட்பங்களில் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது.
அதற்கு முன்னதாக இந்த துறைகளில் பணிகளை துவங்கியது குறிப்பிடத்தக்கது, மேலும் க்வான்டம் தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.