டாடா கெஸ்ட்ரால் கவச வாகனம் வாங்க உள்ளதா இந்திய இராணுவம்?

  • Tamil Defense
  • April 4, 2021
  • Comments Off on டாடா கெஸ்ட்ரால் கவச வாகனம் வாங்க உள்ளதா இந்திய இராணுவம்?

மஹிந்திரா மற்றும் கல்யாணியுடன் மெகா ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின்னர், பாதுகாப்புதுறை இந்திய இராணுவத்திற்காக டாடா-டிஆர்டிஓ கெஸ்ட்ரல் கவசப் கேரியர்களை (ஏபிசி) வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் போன்ற உயரமான பகுதிகளில் பயன்படுத்த டிஆர்டிஓ-டாடா உருவாக்கிய கெஸ்ட்ரல் வீல்ட் கவச பாதுகாப்பு (விஏபி) கவச வாகனம் இந்திய இராணுவத்திற்காக வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இராணுவத்திற்கு சொந்தமான விஏபி கவச வாகனம் பல ஆண்டுகளாக லடாக் முதல் சிக்கிம் வரையிலிலும் சீனப் பிரச்சனை சமயங்களிலும் , உயரமான பகுதிகளில் பயனர் (இந்திய இராணுவம்) சோதனைகளை மேற்கொண்டது.

இந்திய இராணுவத்திற்கு ஏற்ற வகையில் சிறிது மாற்றங்களுக்கு பிறகு ஆர்டருக்காக காத்துள்ளது DRDO-TATA.இந்திய இராணுவம் இதற்மு முன் Mahindra Defence Systems Limited (MDS) நிறுவனத்தின் Light Specialist Vehicles (LSV) மற்றும் Kalyani Group நிறுவனத்திடம் இருந்து Kalyani M4 multi-purpose armored வாகனங்கள் ஆர்டர் செய்துள்ளது.

10 முதல் 12 வீரர்கள் வரை கொண்டு செல்லும் சக்கரங்கள் கொண்ட இந்த கவச வாகனங்களின் தேவை இந்திய இராணுவத்திற்கு உள்ளது.கிட்டத்தட்ட 200 வானகங்கள் ஆர்டர் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.