காஷ்மீரில் சிகப்பில் இருந்து நீல கொடிகளுக்கு மாறிய ராணுவம் காரணம் என்ன ??

  • Tamil Defense
  • April 18, 2021
  • Comments Off on காஷ்மீரில் சிகப்பில் இருந்து நீல கொடிகளுக்கு மாறிய ராணுவம் காரணம் என்ன ??

காஷ்மீரில் இந்திய தரைப்படை வழக்கமாக சிகப்பு நிற கொடிகளை தனது வாகனங்களில் பயன்படுத்தி வந்தது.

தற்போது இந்த சிகப்பு நிற கொடிகளை மாற்றி விட்டு நீல நிற கொடிகளை ராணுவம் பயன்படுத்த தொடங்கியுள்ளது.

இது பற்றி கர்னல் கான் பேசும்போது காஷ்மீரில் மக்களுடன் நெருக்கத்தை அதிகரிக்கவே கொடிகளின் நிறத்தை மாற்றி உள்ளோம் மேலும் ராணுவ கன்டோன்மென்ட் மற்றும் முகாம்களிலும் மாற்றம் செய்ய உள்ளோம் என்றார்.

ராணுவ கன்டோன்மென்ட் மற்றும் முகாம்களின் சுற்றுசுவர்களில் காஷ்மிரை சேர்ந்த இளம் சாதனையாளர்களின் படங்களை வரையப்பட உள்ளன.

மேலும் ராணுவ வீரர்கள் மக்களிடம் அதிக கரிசனையோடு பழக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.