பயிற்சி விமானங்கள் பற்றாக்குறை, குத்தகை முறை பற்றி ஆலோசிக்கும் விமானப்படை !!

  • Tamil Defense
  • April 2, 2021
  • Comments Off on பயிற்சி விமானங்கள் பற்றாக்குறை, குத்தகை முறை பற்றி ஆலோசிக்கும் விமானப்படை !!

இந்திய விமானப்படையில் பயிற்சி விமானங்கள் பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து குறைந்தது 20 விமானங்களையாவது குத்தகை அடிப்படையில் பெற விமானப்படை முயன்று வருகிறது.

தற்போது படையில் உள்ள பிசி-7 பயிற்சி விமானங்களின் பராமரிப்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது காரணம் தயாரிப்பு நிறுவனம் லஞ்ச புகார் அடிப்படையில் தடை செய்யப்பட்டு உள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஹெச்.டி.டி 40 அடிப்படை பயிற்சி விமானம் அடுத்த நான்கு ஆண்டுகளில் படையில் இணையும் என கூறப்படுகிறது.

அதுவரை தேவைகளை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக விமானப்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குத்தகை அடிப்படையில் வரும் விமானங்கள் நாள் ஒன்றுக்கு ஏழு முறை பறக்கும் அளவிற்கு தகுந்தாற்போல் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.

குத்தகை அடிப்படையில் விமானங்களை வழங்கும் நிறுவனமே சிமுலேட்டர் வழங்கி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை கவனிக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை ஆகும்.

தற்போது விமானப்படையில் 260 பயிற்சி ஜெட் விமானங்களும், 14 ஹெலிகாப்டர்களும், 26 டோர்னியர் விமானங்களும், 16 ஏ.என்-32 விமானங்களும் விமானிகளை பயிற்றுவிக்க பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.