இந்திய விமானப்படை தளபதி வருகிற 21ஆம் தேதியன்று ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 6 ரஃபேல் விமானங்களை இந்தியா நோக்கி வழியனுப்பி வைக்கிறார்.
இந்த 6 விமானங்கள் இந்தியா வருகையில் பல்திறன் போர் விமானங்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானங்கள் அம்பாலா தளம் வந்து அங்கிருந்து ஹஸிமாரா தளம் செல்லும் அங்கு இந்த விமானங்களை கொண்டு இரண்டாவது ரஃபேல் படையணி உயிர்ப்பிக்கப்படும்.
மேலும் பனாகர் தளத்தில் உள்ள சி-130 படையணி மற்றும் மேற்குறிப்பிட்ட ரஃபேல் படையணி ஆகியவை இந்தியாவின் விமானப்படை வலிமையை சிக்கீம் மற்றும் அருணாச்சல பிரதேச பகுதிகளில் பன்மடங்கு அதிகரிக்கும்.
மேலும் விமானப்படை தளபதி ஆர்.கே. பதவ்ரியா தனது ஃபிரெஞ்சு சுற்று பயணத்தின் போது தனது ஃபிரெஞ்சு சகா ஃபிலிப்பே லாவிகனை சந்தித்து பேச உள்ளார்.
அதன் பின்னர் ஃபிரெஞ்சு விமானப்படையின் ரஃபேல் படையணியையும் பாரீசில் அமைந்துள்ள விண்வெளி கட்டளையகத்தையும் பார்வையிட உள்ளார்.