
தில்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் பேசிய கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் ராவத் இந்தியா எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணியாது என்று பேசியுள்ளார்.
இந்தியா தனது எல்லையில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் தடுத்துள்ளது என சீனாவுடனான எல்லை பிரச்சினையை குறிப்பிட்டு இப்படி பேசியுள்ளார்.
அவர்கள் இந்தியா மீது அழுத்தம் செலுத்தி எல்லை பிரச்சினையில் அடிபணிய வைக்க முயற்சி செய்தனர் ஆனால் அது ஈடேறவில்லை.
இந்தியா சர்வதேச ஆதரவையும் இந்த விஷயத்தில் பெற்றுள்ளது, அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார்.