நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஹைப்பர்சானிக் தொழில்நுட்ப சோதனை வாகனம் ஒன்றை தயாரித்து வருகிறது, கடந்த வருடம் நடைபெற்ற சோதனையில் 20 நொடிகளில் சுமார் 40கிமீ தூரத்தை இது கடந்தது.
தற்போது இந்த வருடம் நடைபெற உள்ள சோதனையில் நீண்ட நேரம் அதாவது 12 நிமிடங்களுக்கு மாக்-6 வேகத்தில் பறக்க வைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆயுதத்தை சுமார் 1500கிமீ தொலைவுக்கு இயங்க வைக்கும் வகையில் நொடிக்கு 2 கிலோமீட்டரை கடக்கும் அளவுக்கான வேகத்தில் இயங்க வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அடுத்த 5 வருடங்களில் ஆயுதமாக பயன்படுத்தும் வகையில் குறிப்பாக கப்பல் எதிர்ப்பு மற்றும் நிலத்தில் இருந்து ஏவப்படும் வகையிலும் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.