அதிநவீன NSM ஏவுகணைகளை பெற உள்ளதா இந்திய ரோமியோக்கள் ?

  • Tamil Defense
  • April 26, 2021
  • Comments Off on அதிநவீன NSM ஏவுகணைகளை பெற உள்ளதா இந்திய ரோமியோக்கள் ?

உலகிலேயே Naval Strike missile பெறும் முதல் நாடாக ( ஏற்றுமதி) இந்தியா விளங்க உள்ளது.இந்த ஏவுகணைகள் நமது MH-60 ரோமியோ வானூர்திகளில் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நார்வே நாட்டு கோங்ஸ்பெர்க் நிறுவனம் இந்த வானூர்தி ஏவு Naval Strike Missile மேம்படுத்தியுள்ளது.இது ஒரு ஐந்தாம் தலைமுறை ஹை-சப்சோனிக்,கப்பல் எதிர்ப்பு/ தரை இலக்கு தாக்கும் க்ரூஸ் ஏவுகணை ஆகும்.இந்த ஏவுகணைகள் பெறும் முதல் நாடாக இந்தியா ஆக உள்ளது.

MH-60R வானூர்திகள் டெலிவரி பெறும் நேரத்தில் இந்த ஏவுகணைகள் வாங்க கொங்ஸ்பெர்க் நிறுவனத்துடன் தனியாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த NSM-HL 400கிகி எடை இருந்தாலும் 185கிமீ வரை உள்ள இலக்குகை அழிக்க வல்லது.

NSM தற்போது நான்கு கடற்படைகளில் செயல்பாட்டில் இருந்தாலும் வானூர்தி ரகம் பெற உள்ள முதல் நாடாக இந்தியா விளங்கும்.