எஸ்400 இணைப்புக்கான களப்பணிகள் ஆரம்பம் !!

  • Tamil Defense
  • April 23, 2021
  • Comments Off on எஸ்400 இணைப்புக்கான களப்பணிகள் ஆரம்பம் !!

இந்திய விமானப்படை எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பின் இணைப்புக்கான கள பணிகளை துவங்கி உள்ளது.

நவம்பர் மாதம் முதலாக எஸ்400 அமைப்புகளின் டெலிவரி துவங்க உள்ளது, முதல் எஸ்400 படையணியை ஏப்ரல் 2022 செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

முதலாவது எஸ்400 படையணி தேசிய தலைநகர பகுதிக்கு மேற்கு பகுதியில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நூற்றுக்கணக்கான இந்திய விமானப்படை வீரர்கள் தற்போது ரஷ்யாவில் எஸ்400 அமைப்பை இயக்க பயிற்சி பெற்று வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.