நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது, மருத்துவமனைகளில ஆக்ஸிஜன் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு இந்திய விமானப்படை விமானங்கள் மூலமாக வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் கன்டெய்னர்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகிறது.
பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் இந்திய விமானப்படையை இதற்கு பயன்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், நாட்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் கூறுகின்றன.
இந்திய விமானப்படை அதிகாரிகள் பேசும் போது தற்போது எங்களுக்கு உறுதியான எந்த உத்தரவுகளும் தரப்படவில்லை என தெரிவித்தனர்.
இந்திய விமானப்படை தற்போது மருத்துவ பணியாளர்கள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று வருகிறது.