சீன எல்லைக்கு மலையக தாக்கும் பிரிவை அனுப்பும் இந்தியா

  • Tamil Defense
  • April 12, 2021
  • Comments Off on சீன எல்லைக்கு மலையக தாக்கும் பிரிவை அனுப்பும் இந்தியா

இந்திய-திபத் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு மலையக தாக்கும் படையின் 10000 வீரர்களை அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலையக பகுதிகளில் தீரமுடன் போர் செய்யும் பயிற்சி பெற்ற இந்த படையினர் சீனாவுக்கென்றெ பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிரிவு ஆகும்.மேலும் சீன எல்லைப்பகுதி பெரும்பாலும் மலைசார் பகுதிகளாக இருப்பதால் இந்த படைப் பிரிவை இந்தியா எல்லைக்கு அனுப்ப உள்ளது.

கடந்த ஆண்டு முதலே இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.போர் அளவுக்கு சென்ற இந்த மோதல் பின்பு தொடர் பேச்சுவார்த்தைகளால் தணிக்கப்பட்டது.கிழக்கு லடாக் பகுதிகளில் இருந்து சீனப்படைகள் விலகினாலும் எல்லையின் மற்ற பகுதிகளில் இருந்து இன்னும் வெளியேறாமல் உள்ளது.

சீனப்படைகளை வெளியேற்ற தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வேளையிலும் இந்தியா தற்போது மலையக பிரிவை எல்லையை ஒட்டி அனுப்ப முடிவு செய்துள்ளது.

இந்த படைப் பிரிவின் பெயர் பிரம்மாஸ்திர கோர் ஆகும்.