33 போர் விமானங்கள் வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • April 11, 2021
  • Comments Off on 33 போர் விமானங்கள் வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் !!

இந்த வருடம் இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சுற்றுபயணமாக வரும் போது போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய விமானப்படை 12 சுகோய் 30 போர்விமானங்கள் மற்றும் 21 மிக்29 போர் விமானங்களை படையில் இணைக்க விரும்புகிறது.

12 சுகோய் 30 விமானங்களும் இந்தியாவிலேயே பொருத்தி கொள்ளும் வகையில் ரஷ்யாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.

அதே போல மிக்29 விமானங்களின் உடல்பகுதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் பின்னர் நமது தேவைக்கேற்ப அவற்றில் கருவிகைள இணைத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.