லடாக் பிரச்சினையின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • April 22, 2021
  • Comments Off on லடாக் பிரச்சினையின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்திய தரைப்படை !!

கடந்த வருடம் லடாக் பிரச்சினையின் போது கைலாஷ் சிகரத்தை இந்திய சிறப்பு படையினர் கைபற்றுவதற்கு முன்னர்,

கிழக்கு பகுதியில் இந்திய தரைப்படை அதிக துருப்புகளை குவித்து ஊடுருவி தாக்க திட்டமிட்டது தற்போது வெளிவந்துள்ளது.

இந்தியாவுடனான சீன எல்லை மேற்கு பகுதி மத்திய பகுதி மற்றும் கிழக்கு பகுதி என மூன்றாக பிரிக்கப்பட்டு உள்ளது.

இதில் நடுப்பகுதியில் நமக்கு பலம் குறைவு ஆகவே அந்த நேரத்தில் இந்திய தரைப்படை அங்கு அதிக துருப்புகளை முன்னெச்சரிக்கையாக குவித்தது.

இந்த நிலையில் லடாக்கில் இருந்து பிரச்சினை மற்ற கள முன்னனிகளுக்கு பரவாமல் தரைப்படை பார்த்து கொண்டது

ஆனால் லடாக்கில் நிலைமை கைமீறினால் இந்திய தரைப்படை கிழக்கு பகுதியில் ஊடுருவி தாக்க திட்டம் வகுத்தது.

இதன் மூலமாக லடாக்கில் சீன பிடியை தளர்த்ததுவதே இந்திய தரைப்படையின் நோக்கமாக இருந்தது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.