உலகின் மூன்றாவது மிகப்பெரிய பாதுகாப்பு பட்ஜெட் கொண்ட நாடு ??

  • Tamil Defense
  • April 27, 2021
  • Comments Off on உலகின் மூன்றாவது மிகப்பெரிய பாதுகாப்பு பட்ஜெட் கொண்ட நாடு ??

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு பின்னர் இந்தியா தான் உலகிலேயே பாதுகாப்பு துறையில் அதிகம் செலவழிக்கும் நாடாக திகழ்கிறது.

2020ஆம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு துறையில் செலவழிக்கும் தொகை சுமார் 1981 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது.

இது 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 2.6% உயர்வை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பேரிடர் இதில் பெரிய அளவில் பாதிக்கவில்லை என கூறப்படுகிறது.

அமெரிக்கா சுமார் 778 பில்லியன் டாலர்களும், சீனா 252 பில்லியன் டாலர்களும், இந்தியா 72 பில்லியன் டாலர்களும், ரஷ்யா 61 பில்லியனும்,

இங்கிலாந்து 59 பில்லியனும், சவுதி அரேபியா 57 பில்லியனும், ஜெர்மனி 52 பில்லியனும், ஃபிரான்ஸ் 52 பில்லியனும், ஜப்பான் 49 பில்லியனும், தென்கொரியா 45 பில்லியனும் செலவழித்து முதல் 10 இடங்களில் உள்ளன.

முதல் ஐந்த நாடுகள் மட்டுமே உலக பாதுகாப்பு பட்ஜெட்டில் சுமார் 62% அளவுக்கு பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.