சீன விவகாரத்தில் இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி வேறு யாரும் இல்லை: அமெரிக்க அறிக்கை !!

  • Tamil Defense
  • April 17, 2021
  • Comments Off on சீன விவகாரத்தில் இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி வேறு யாரும் இல்லை: அமெரிக்க அறிக்கை !!

சீனாவை எதிர்கொள்ளும் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி வேறு எந்த நாடும் இல்லை என அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது.

ராணுவ ரீதியாகவும் சரி பொருளாதார ரீதியாகவும் சரி இந்தியாவின் மனிதவளம் மற்றும் ராணுவ பலம் ஆகியவை இன்றியமையாதது என அதில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக குறிப்பாக மென்பொருள் துறையில் இந்தியாவின் கை மேலோங்கி உள்ளது இது அமெரிக்கா இந்தியாவை அதிகம் சார்ந்து இருக்க வழிவகை செய்கிறது.

இத்தகைய நிலை அமெரிக்கா மற்றும் இந்தியா இடையில் பல நேரங்களில் விரிசல்களை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

எது எப்படியோ உலக பொருளாதாரம் இந்தியா மற்றும் சீனாவை நோக்கி நகர்கையில் இந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான உறவுகள் எதிர்கால உலக பொருளாதாரத்தை வடிவமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.