
இந்திய விமானப்படை பதான்கோட் தாக்குதலுக்கு பிறகு தனது தளங்களில் பாதுகாப்பை அதிகரிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் தற்போது அஷோக் லேலான்ட் நிறுவனத்தின் தயாரிப்பான 6 டன்கள் எடை கொண்ட இலகுரக கவச வாகனங்களை படையில் இடைத்து உள்ளது.
இந்த வாகனங்கள் விமானப்படை தளங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் கருட் கமாண்டோ படையினர் விரைவாகவும் பாதுகாப்பாகவும் சென்று பதிலடி கொடுக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.