முடிவுக்கு வந்த வருணா இந்திய ஃபிரான்ஸ் கடற்படை பயிற்சிகள் !!

  • Tamil Defense
  • April 29, 2021
  • Comments Off on முடிவுக்கு வந்த வருணா இந்திய ஃபிரான்ஸ் கடற்படை பயிற்சிகள் !!

19ஆவது “வருணா-2021” இந்தோ-ஃபிரெஞ்சு கடற்படை கூட்டு போர் பயிற்சி அரபிக்கடல் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில்,

இந்த போர் பயிற்சியானது நிறைவடைந்தது, இந்த பயிற்சியின் போது அதிக முக்கியத்துவம் வாய்ந்த வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, கடற்பரப்பு மற்றும் வான் எதிர்ப்பு தாக்குதல் பயிற்சி, ஹெலிகாப்டர் மற்றும் விமான பயிற்சி, சப்ளை பயிற்சிகள் போன்றவை நடைபெற்றன.

இந்திய கடற்படை சார்பில் ஐ.என்.எஸ்.கொல்கத்தா, ஏவுகணை ஃப்ரிகேட்டுகளான ஐ.என்.எஸ். டார்காஷ் மற்றும் ஐ.என்.எஸ் தல்வார், டேங்கரான ஐ.என்.எஸ். தீபக், 1 பி8ஐ நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம், 1 கல்வரி ரக நீர்மூழ்கி ஆகியவையும்,

ஃபிரெஞ்சு கடற்படை சார்பில் சால்ஸ் டி கால் விமானந்தாங்கி கப்பல், ஹோரைஸான் ரக வான் பாதுகாப்பு நாசகாரி கப்பல் ஷெவாலியர் பால், அக்விடேன் ரக ஃப்ரிகேட்டான ப்ராவென்ஸ் போன்றவை இதில் பங்கு பெற்றறன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாத ஆரம்பத்தில் லா பெரூஸ் என் கடற்படை பயிற்சியில் இந்தியா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்ததரேலிய நாட்டு கடற்படைகள் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.