இந்தியா ஆஃப்கன் நிலையை கவனித்து வருகிறது -ஜெனரல் ராவத் !!

இந்தியா ஆப்கானிஸ்தான் நிலையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அமெரிக்காவின் படைவிலக்கத்துக்கு பின்னர் அங்கு ஏற்படும் வெற்றிடம் பற்றிய சிந்தனை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியா இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் நிலையில் அந்த வெற்றிடத்தை விரும்பத்தகாத சக்திகள் நிரப்பி விடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

மேலும் பேசுகையில் ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்கு தேவையான எந்தவித உதவியையும் இந்தியா செய்து கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆஃப்கானிஸ்தான் நிலையை ஈரான் அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் எது பயன்படுத்தி கொள்ளும் என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது,

ஆஃப்கானிஸ்தான் வளங்கள் நிறைந்த நாடு தற்போது பல நாடுகள் அங்கு கால்பதிக்க விரும்புகின்றனர் எனவும்,

இந்த வளச்களை தங்களின் சுயலாபத்துக்காகவே பல நாடுகள் பயன்படுத்தி கொள்வர் ஆனால் அந்த நாடு பயன் அடைவதில் அவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்றார்.