எல்லையில் சீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா

  • Tamil Defense
  • April 13, 2021
  • Comments Off on எல்லையில் சீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா

கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது கோக்ரா ,ஹாட் ஸ்பிரிங் மற்றும் தெஸ்பங் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேற படைகளை பின்வாங்க மறுத்துள்ளது.

250கிமீ வரை சென்று தாக்க கூடிய HQ-9 வான்பாதுகாப்பு ஏவுகணைகளை சீனா இந்திய எல்லைக்கு அருகே நிலைநிறுத்தியுள்ளது.லடாக்கில் இந்திய எல்லைக்கு மிக அருகே நிலைநிறுத்தியுள்ளது.இந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் நடவடிக்கையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பங்கோங் ஏரி பகுதியில் இருந்து இரு நாட்டு படைகளும் வெளியேறி இருந்தாலும் இரு நாடுகளும் எல்லையை விட்டு இன்னும் முழுமையாக படைவிலக்கம் கொள்ளவில்லை.

மோதல் பகுதிகளில் இருந்து சீனப்படைகள் வெளியேறினால் மட்டுமே இந்திய படைகள் வெளியேறும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.

சுகர் செக்டார்,சென்ட்ரல் செக்டார் மற்றும் வட-கிழக்கு எல்லைப்பகுதிகளில் இந்தியா படைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.