புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்க இந்தியா திட்டம் !!

  • Tamil Defense
  • April 1, 2021
  • Comments Off on புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்க இந்தியா திட்டம் !!

கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியா அக்னி-5 ஏவுகணையை முதன் முதலாக ஏவி சோதனை நடத்தியது, 5000 கிலோமீட்டர் செல்லும் என இந்தியா சொல்லி கொண்டாலும் உண்மையான தாக்குதல் வரம்பு 8000 கிலோமீட்டர் என கூறப்படுகிறது.

முதல் சோதனைக்கு பிறகான காலகட்டத்தில் பல்வேறு மேம்பாடுகளை அடுத்து சுமார் 7 முறை அக்னி-5 சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

தற்போது இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

கே4 மற்றும் கே15 ஆகிய இரண்டு நீர்மூழ்கி பலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கும் நிலையில் தற்போது கே5 மற்றும் கே6 ஏவுகணைகளை உருவாக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கே5 ஏவுகணை பல அணு ஆயுதங்களை சுமக்கும் வகையில் இந்தியா உருவாக்கும் முதலாவது ஏவுகணையாக இருக்கும் மேலும் இது அக்னி-5க்கு இணையான தாக்குதல் வரம்பை கொண்டிருக்கும்.

அதை போல கே6 ஏவுகணையானது சுமார் 6000 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்டிருக்கும், அத்துடன் எடை குறைந்த அணு ஆயுதங்களை சுமந்தால் 10000 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும்.

இதன் மூலமாக இந்தியாவால் உலகின் எந்த பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை போல 20 வருடம் பழமையான அக்னி2 ஏவுகணையை கே4 ஏவுகணையை கொண்டு மாற்றவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.