
ஃபிரெஞ்சு நாட்டின் முன்னனி என்ஜின் தயாரிப்பு நிறுவனமான சஃப்ரான் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கூட்டு நடவடிக்கையாக என்ஜின் தயாரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி சஃப்ரான் நிறுவனத்தின் M88 ரக என்ஜினை இந்தியாவில் கூட்டு தயாரிப்பு முறையில் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனால் ரஃபேல் போர் விமானங்களின் என்ஜின் பராமரிப்பு மேம்பாடு உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆகியவற்றை சுலபமாக மேற்கொள்ள முடியும்.
மேலும் தொழில்நுட்ப பரிமாற்றல் பற்றிய குறிப்புகளும் மேற்கண்ட ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி சஃப்ரான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜீன் பால் அலாரி பேசும்போது ஹெச்.ஏ.எல் உடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளோம் எனவும்,
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்யவும் அதிக திறன் மிக்க வேலைகளை உருவாக்கவும் விரும்புகிறோம் என்றார்.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவன தலைவர் மாதவன் பேசுகையில் சேட்டக் சுட்டா, இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் மற்றும் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்களுக்கான என்ஜின் தயாரிப்பு பணியில் சஃப்ரான் மிகவும் உதவி உள்ளது.
இதுவரை சுமார் 450 ஷக்தி ஹெலிகாப்டர் என்ஜின்களை நாங்கள் தயாரித்து உள்ளோம் இதுவே எங்கள் ஒத்துழைப்புக்கு சாட்சி எனவும் அவர் கூறினார்.
இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.