இந்திய பாக் உறவுகளில் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது-சீனா !!

  • Tamil Defense
  • April 1, 2021
  • Comments Off on இந்திய பாக் உறவுகளில் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது-சீனா !!

சமீபத்தில் சீன வெளியுறவு துறை அமைச்சக செயலாளர் ஜாவோ லிஜியான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

மேலும் பேசும்போது பாகிஸ்தானுடன் இணைந்து பிராந்திய அமைதி மற்றும் நலனுக்காக இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளதாகவும்,

சீனா பாகிஸ்தான் உடனான உறவை பெரிதும் மதிக்கிறது மேலும் இருதரப்பும் தொடர்ந்து இணைந்து செயல்படுவதை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.